அம்மா என்று அழைக்கும்
வாயால் மம்மி என்கிறாய்
அப்பா என்று அழைக்கும்.
வாயால் டாடீ என்கின்றாய்.
தமிழா நீ பேசுவது தமிழா.???
நீ தமிழன் அல்லவா?
உன் தாய் மொழியும்-தமிழ் அல்லவா?
அழகான செம்மையான தமிழில்.
அப்பாவை அப்பா என்றும்.
அம்மாவை அம்மா என்றும்.
நம்ம பைந்தமிழில் கூப்பிடன்டா-தமிழா?
அம்மா சோறு தாரும் என்று.
சொல்லும் சொல்லுக்கு.
(ரயிஸ்) என்று அங்கில பினாமியில்.
சொல்லுகின்றார்கள்.
விஸ்கோத்து என்று சொல்லும்.-சொல்லுக்கு.
தமிழ் வார்த்தையை சுருக்கி(விஸ்கட்)
என்று.சொல்லுகின்றாய்.
தமிழா நீ பேசுவது தமிழா?????
ஒருவனுடன் உரையாடும் போது.
அதற்கு பிறகு என்ன என்று -கேட்கும்.
சொல்லுக்குப் பதிலா.(சோ)
என்ற ஆங்கில வார்த்தையை
ஏன்டா தமிழா தமிழில் புகுத்துகின்றாய்.
உன் தந்தையும் தாயும் தமிழ் அல்லவோ.
நம் தமிழ் மொழி செம்மொழி- அல்லவா.
இதை புரியாமல் ஆங்கில பினாமியில்.
பேசுகின்றாய் தமிழா…..
தமிழர்கள் நாம் எல்லோரும்.
தமிழில் பேசினால்-நம் மொழி வளரும்மல்லவா?
நம் தமிழ் மொழியான செம்மொழியை-வளர்க்க.
கி.பி.1-3ம் நூற்றாண்டில். (சங்ககாலத்தில்).
முதற்சங்கம் இடைச்சங்கம்.கடைச்சங்கம்.
என முச்சங்கள் வளர்த்தார்கள்.-நம்
தமிழ் மொழியை வளர்க்க அல்லவா.
எத்தனையோ தமிழ் மன்றங்கள்-இருந்தும்.
தமிழ் வளாத்தாலும்.ஆங்கிலத்தில் அல்லவா.-பேசுகின்றோம்
இன் நிலை இப்படி இருந்தால்.
நம் தமிழ் மொழியின் நிலை என்னவாகும்?
எதிர்கால சந்ததியினருக்கும் நம் தமிழ்மொழியினை
கற்றுக் கொடுப்போம்.
தமிழனாய் இருப்போம்-தமிழ்லை வளர்ப்போம்.
தமிழ்லை கற்போம்……….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-