ஏத்தனை பொய்களையும்.
பித்தலாட்டங்களையும்.
இந்த உலகம் எப்படி
பொறுக்கும்
எத்தனை கொடுமைகளையும்
தாங்கும்.
நித்தமும் வணங்கி
நிஜத்தையுடைத்தால்.
புத்தன் ஜெசு.காந்தி.
பூமியில் பிறந்தது எதற்கு.
சத்தியம் தர்மம்.
மங்கிப் போச்சி.
நிதி நியாயம்.
சொத்துப் போச்சி.
தினம் தினம்.
வன் கொடுமைகள்
தினம் தினம்அழுகை
ஓலங்களும்.
கோட்டால் இந்தமி.
எப்படி பொறுக்கும்.
அசுர வேகத்தில் விஞ்ஞானம்.
நடைப் பயணம் போடுது.
அதில் எத்தனை எத்தனை.
கண்டுபிடிப்புக்கள்.நிகழுது.
அது நண்மையா? தீமையா?
என்று அறியாமல் பால்கேட்ட மனிதன்.
அதை பூமியில் அமைக்கிறான்.
அதுதானே அனு உலை வெடித்து.
சிதறி இன்றைய மனித குலம்.
பல அவஸ்த்தைக்கு முகம்.
கொடுக்க வேண்டியவனாச்சி.
இத்தனை கொடுமைகனையும்.
தாங்கிக் கொண்டு பூமி எப்படி.
பொறுக்கும் மனிதா???சொல்……
இரட்டையடுக்கு வீடும்.
சொத்து சுகம் உன் வசதியா!.???
ஆடை ஆலங்காரம் உன் தகுதியா!.???
ஏழை வாழும் இந்தப் ப+மியில்.
நீ! மடிந்தால்……
பூமியின் மேல் நீ என்ன பெரிசா?.
ஆடம்பர வாழ்கை வாழ்ந்த-உனக்கு.
ஏழ்மையா வாழும் ஏழைக்கும்.
ஆறடி(06) நிலந்தன் சொந்தமடா.
பூமியெல்லாம் சொந்தம் என்று.
ஆணவம் காட்டும் மனிதா!
நீ புரியாத மனிதன்தாண்டா!.
உண்மையின் தத்தவத்தை.
கவியாக சொல்லியிருக்கேன். மனிதா!
நீ! புரிந்து கொன்டு வாழ்ந்தால்-நீ.
நீ!……….புனிதனடா……………….
நீ! புரியாமல் பூமியில் வாழ்ந்தால்.
நீ! வாழ்ந்து என்னடா அர்த்தன்டா மனிதா!.
மனச்சாட்சி என்ற ஒன்று.இருந்தால்.
பூமிக்கு பிரச்சினை வந்துயிருக்காது-மனிதா!.
இப்படியும் கொடுமையை
பூமி எப்படி தாங்கும் மனிதா!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து கண் விழித்து என் ;மனதில் ஊற்றேடுத்த வரிகளை.
கவி வரிய தந்துள்ளேன் என் எழுத்தக்கு எப்போவாவது ஒருநாள் பூட்டிய வலங்கு திறக்கப்படும்.
அப்போது எல்லாம் வாசக நெஞ்சங்களின் உள்ளத்தில் உள்ளது…படித்த பின்பு உங்கள்.கருத்துக்களை.
பதியுங்கள்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-