சிறைக்கூடம்
சிந்தனையின் சிகரமாய்.
சீரலிந்த வாழ்கையாய்.
சீர்திருத்த வாதிகளால்.
சிக்கித் தவிக்கும்.
சில்லரைகள்.நாங்கள்.
சீர்திருத்தம் வேண்டுமென்று.
சிறைக்கூடம் சென்றோம்.
சீர்கொட்ட மனிதன்-எங்களை.
சிதர்ச்சி வைத்தார்கள்.
தாயின்முலையில்-குடித்தபால்.
வெள்ளை நிறம்-ஆனால்.
தன்மானம் இல்லாமல்.
தாவி.தாவி அடிக்கையில்.
தாயின் சிந்தனை வருது.
வாய்யென்றும் கண் என்றும்-பாராமல்.
நா கூசும் வார்தைகளை சொல்லி.
சுழன்டு சுழன்டு அடிக்கையில்.
கால் உடைந்து கையுடைந்து.
பூமி எங்கும் உதிரம் பரவின.
சிறைக் கூடம் சீர்திருத்த கூடம்-என்பார்கள்.
ஆனால் அது ஒரு.
இரைக்கூடம் என்பதை.
அன்றுதான் புரிந்தேன்.
தாயானவள்.சமைக்கும் சாப்பாடு.
நல் சுவை கொண்டது-என்பார்.
ஆனால் சிறைக்கூட சாப்பாடு.
சுவை கொட்ட சாப்பாடு.
ஊரில் இருக்கும் போது.
உற்சாகமாய் வாழ்ந்தோம்.
சிறைக்கூடம் சென்றவுடன்.
முற்றும் துறந்த ஞானியாய்.
முகத்தில் சோகத் தாடியும்.
அழியாத சோகத் தளும்பும்.
சிதரல் சித்திரம் போல்.உள்ளது.
பக்கத்தில் கதைப்பதற்கு-யாருமில்லை.
நான்கு பக்கம் உயிரற்ற கற்சுவருடன்.
கதைக்கும் நிலை அல்லவா.
மனதில் சோகம் நிறைந்த.வாழ்கையும்.
மனதில் சஞ்சலம் கொண்ட வாழ்கையும்.
வாழ வேண்டிய நிலையல்லவா?.
ஊமை விழி அழுகிறது.
நெஞ்சுக்குழி காய்கிறது.
ஓத்தனம் போட யார் வருவார்.
அடியும் உதையும் வெட்டி வெட்டி.
மறையும் மின்னலைப் போல வருகிறது.
இற்கையில் கற்றடித்தால்
ஒருகனம் ஓய்விருக்கும்-ஆனால்.
சிறைக்கூட வாழ்கையில்.
அடி உதைக்கு ஓய்விருக்காது.
அப்போதுதான் உணர்வான்.
குற்றம் செய்தவன் சிறைக்கூடம்.
சீர்திருத்தக்கூடம்-அல்ல.
அது ஒரு சித்திரவதைக் கூடம்.
என்பதை அன்றுதான் புரிவான்
-நன்றி-.
-அன்புடன்-
-ரூபன்-