சொந்த சுமையை.
தாங்கி தாங்கி-என்.
வாழ்வே சுமையாக மாறியது.
அந்த சுமையை இறக்க முடியாமல்.
சூறாவளிக் காற்றில்.
வெடித்துப் பறக்கும் பஞ்சு -போல.
வாழ்கையும் பஞ்சாக-பறக்கிறது.
இந்த சுமை தாங்கிய வாழ்வுக்கு.
எப்போது விடிவு-வரும்…….?
இறைவா…….இறைவா…..
என் பாசத்துக்குரிய-தந்தையும்.
பாசத்துக்குரிய-அன்னையையும்.
உடன் பிறப்பு என்று.
சொல்லும் அளவுக்கு-உரிய.
ஒரேஒரு தங்கையும்.
அத்தனை உறவுகளையும்.
இராச்சித அலையான -சுணாமிக்கு.
பலியாக போனார்கள்.
மிச்சமாக நான்கு உறவுகளையும்.
கல்வியில் சிறந்தோங்க வைக்க.
படாத கஸ்டங்கள் பட்டு.
வியர்வை சிந்திய வாழ்கையா.
என் வாழ்வு மாறி விட்டது.
கூலி வேலை செய்து -வாழ.
இறைவன் வகுத்து விட்டான்.
இந்த சுமை தாங்கிய -வாழ்வு.
எப்போது சுமையில்லாத வாழ்வாக.
மலரும் இறைவா-அந்த நேரம் .
எப்போது…………..புலரும்………???
தனிமையில் இருந்து-என்வாழ்வு.
கண்ணீர் சிந்தும் வாழ்கையாக.
மாறி விட்டது…………………..
இயற்கையில் இரவு என்ற ஒன்று-வந்தால்.
பகல் என்ற ஒன்று-இருக்கும்.
ஆனால் என் வாழ்கையில்.
இரவும் பகலும் ஒன்றாகவே -உள்ளது.
முன்னுக்கு கஸ்டப் பட்டால்.
பின்னுக்கு நல்லா -வாழளாம்.
என்ற முது மொழிக்கு அமைய.
என்னுடைய -வாழ்கையில்.
சுமையென்ற வடுச் சொல்லு.
எப்போது மறையும்.இறைவா….????.
என்னுடைய தன் நம்பிக்கையில்.
என் வாழ்வு பயணிக்கிறது.
சுமையில்லாத வாழ்கையாக-வாழ.
என் முயற்சியின் மேல்.
இறைவனின் கருணையும்.வரவேண்டும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-