என் ஆழ் மனதில் உள்ள.
மாறாத சோகங்கள்.
மாறாத வடுக்கள்.
ஒளி விம்பம்மாக-என்.
விழிகளில் இருந்து- கசியும்.
கண்ணீர்……
அதில் எத்தனை மர்ம -முடிச்சிக்கள்.
சுமையாக அடங்கியுள்ளது..
அது ஒன்றா இரண்டா.
எண்ணில் அடங்காதவை.
அவற்றில் பல திரைமறை.
மர்மங்கள்.புரையோடியுள்ளது.
அந்த புரையோடியுள்ள மர்மங்கள்.
வெளியுலகுக்கு வராமல்.
பாதாள குகையான.
மனக் குகையில்.
புதைந்து கிடக்கிறது.
சில விடயங்கள்-மனதுக்கு.
இதமாக இருந்தாலும்.
பல விடயங்கள் என் மனதுக்கு.
திகில் போன்ற பய உணர்வு.
மனதை கசியவைக்குது.
அதில் ஒன்று ரெண்டு விசியங்கள்.
இதயத்தில்.ரணமாக வலிக்குது.
நினைத்துப் பார்க்கையில்.
தொலைந்து போனவர்ககளை-காண்பதா?.
தொலைத்து விட்டவர்களை தேடுவதா?
இந்த இரண்டு வினாக்கும் .
விடை தெரியாமல்.
கடல் அலை போல்.
மனசு ரணமாக சுழலுது.
தலையில் உள்ள முடி கூட.
வெட்டினால் வளரும்.
தேய்ந்து போன நிலாக்கூட-வளரும்.
ஆனால் என்மனதில்.
புரையோடி புதைந்திருக்கும்.
மனப்பாரங்கள்.
சாகும் வரை தொடர்ந்திருக்கும்.
தொடர் சங்கிலியாக.
குற்றம் செய்து தண்டணை.
நிறைவேற்றிய-சிறைக் கைதிக்கு கூட.
என்றாவது விடுதலை கிடைத்து விடும்.
நீதியின் என்னும் கருணையால்…
ஆனால் என் மனச் சிறையை.
பூட்டிவைத்திருக்கும்-விலங்கு.
எப்போது.திறக்கப்படும்.
எப்போதாவது ஒரு நாள்.
ஆண்டவனால்.திறக்கப்படும்
அப்போது.மல்லிகைப் -பூவாக.
மலர்ந்து. இறைவன் பாதார
விந்தத்தை சென்றடைவேன்…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-