சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் “மியூசிக் ஹால்” கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்தே இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் அவர் அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார்.1896-இல் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில்,சார்லியும் அவரது சகோதரர்சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது.பின்னர் இருவரும்அநாதைகளுக்கான பள்ளி(Hanwell School for Orphans and Destitute Children) ஒன்றில்வளர்ந்தனர். இதற்கிடையில் இவர் தந்தை குடிப் பழக்கத்தினால் உடல் நலம் குன்றி சாப்ளினின் 12-ஆவது வயதில் மரணம் அடைந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த “கேன் ஹில் அசைலம்”(Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப் பட்டார்.பின்பு இவரும் 1928 இறந்தார்.
சாப்ளின் 5 வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894-இல் மியூசிக் ஹால்-இல் அவர் தாய்க்கு பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார்.சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்த பொழுது, இரவுகளில் அவரது தாய் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயது இருந்த பொழுது,சிட்னி லண்டன் ஹிப்போட்ரோமில் “சின்ட்ரெல்லா ” பாண்டோமைமில் ஒரு பூனையாக(நகைச்சுவைக் கதாப்பாத்திரம்) நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903-இல் “ஜிம்,அ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்”(Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது – செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித் தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம்.இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ்(Casey’s Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும் , Fred Karno’s Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார்.அமெரிக்காவின் குடிபெயர்ப்புப் பதிவுகளின் படி கார்னோ குழுவுடன் October 2, 1912 -இல் அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார்-இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர்.
im.like this good.good