கடல் வழிப்பயணம் சிறுகதை (தொடர்ச்சி-பாகம்-05.துடன் நிறைவு கான்கிறது)
பாகம்:-01.02.03.04.05 என எழுதப்பட்டுள்ளது……இப்போது இறுதித் தொடர் தொடர்கிறது.பாகம்-05.
உறவுகளை ஏற்றிய வாறு கனடாவை நோக்கி கப்பல் பயணிக்றது.எங்களுடைய கப்பலுக்கு இயற்கை அன்னையால் எந்த ஒரு தீங்கும் வரக்கூடாது என்று எங்கள் மனதுக்குள் எங்கள் குல தொய்வங்களை.
வேண்டி நின்றோம்.
இரவு பகலாக (90)நாட்கள் கடலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது ஒவ்வெரு நாட்டு எல்லையும் கடக்கும் போது எத்தனை இடையூறுகள் வந்தது.அதையும் தாங்கிக் கொண்டு எங்கள் மாலுமி.எல்லாத்தையும் சமாலித்து கப்பலை ஓட்டிக் கொண்டுயிரந்தார்.கடலில் கப்பல் சொல்லும் போது.பெரிய பெரிய.இராச்சித அலைகளுக்கும் பெரிய பெரிய பனிக்கட்டிகளுக்கும்.பாறைக் கற்களையும் கடந்து. மிகவும் நுற்பமான முறையில். கெட்டித் தனமாக.கப்பலை ஓட்டினார்கள்.இரண்டு மாலுமிகளும்.
சரியாக ஒன்டரை. மாதம் கழித்த பின்பு எங்கள் இடம் கை வசமிருந்த . தண்ணீர். உணவு எல்லாம்.ஒர் அளவு குறைந்து கொண்டு வந்தது.காலையில் சாப்பிட்டால் இரவில்தான் சாப்பிடுவது.என்ற மாதிரி.நாள் ஒன்றுக்கு.இரண்டு வேலை உணவு என்ற அடிப்படையில் உண்டு வந்தோம்.மற்ற நேரங்களில் தண்ணீரை. குடிப்பதுதான்.இருந்தாலும் கடல் மார்க்கப் பயணத்தின் போது ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர்.உணவு பரிமாரிச் சாப்பிடுவதுதான் வழக்கம். கடத்த மூன்று மாதங்களில் எங்கள் வாழ்வில் சொல்ல முடியாத துன்பங்களை சுமந்து கொண்டு வாழ்ந்தோம்.அதே போல்(03) கழித்து நாங்கள் பயணித்த கப்பல் .கனடா துறைமுகத்தை.சென்றடைந்த போதுதான். மனசு ஒரு திருப்தியடைந்தது.அதன் பின்பு நாங்கள் ஒரு. நாள் பொழுதை துறைமுகத்தில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…
மறு நாள் எங்களை ஒவ்வெருவராக இறக்கினார்கள்.எங்களுக்கு சாப்பாடு மற்றும் உடைகளும். சிறு குழந்தைகளுக்கு. பால்மா. விஸ்கட் உணவுப் பண்டங்களையும் தந்தார்கள்.அதன் பின்பு எங்களை தனித்தனியாக .சந்திப்புக்களை மேற்க் கொன்டார்கள்.அதிலும் பல இன்னல் களை சந்தித்தோம்.அதிலும் ஒருசிலரை கூட்டில் அடைக்கப்பட்ட கிளி போல சிறை வாழ்கையும் வாழ்ந்தார்கள்.சிலரை குடியுருமை கொடுத்து அன்நாட்டு பிரஜயாக்கினார்கள் அதில் நாங்களும் உள்ளடங்கப்பட்டோம் என்று இலக்கியா சொன்னால்.
நாங்கள் கஸ்டப்பட்டு கடல் வழிப் பயணமாக புறப்பட்ட மாதிரி எத்தனை நாட்டு ஏதிலிகள் சென்றுள்ளார்கள்.எத்தனை பேர் கடலின் பனிப் பாறையுடன் மோதுண்டு.கடல் நீரில் மூல்கி வரலாறும் உண்டும்.கடலலையால் அடித்துண்டு கடல் வாழ் உயிர் இனங்களுக்கு இறையாக போன கதையும் உண்டு.இப்படியான கடல் வளிப்பயணத்துக்கு எம்பக்கம் இறைவன் துணையிந்தால் நாங்கள் எடுக்கின்ற ஒவ்வெரு பயணமும் வெற்றி நடை போடும் என்பது திண்ணம்.
(ஆனால் எங்கள் இலக்கையும் அடைந்து விட்டோம். கனடாவில் குடியுருமை பெற்று விட்டோம்.)
{சிறந்த செயல் மிக்க துணிச்சலான முடிவை .நீங்கள் தான் எடுக்க வேண்டும்.-கடல் வளிப்பயணத்துக்கு}
{கடல் வழிப் பயணம் சிறுகதை நிறைவு பெற்றது.}
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-