புத்தி கெட்ட சமூதாயத்தில்.
புத்துயிர் பெறுவதற்கு.
அத்தியாயம் படைப்பதற்கு.
அத்ம ஞானம் பெற்றிருந்தேன்.
என்னை அந்திரத்தில்- வாழவேண்டும்மென்று.
யார் விதித்த விதியோ-எனக்கு?.
மத்தியானம் கடைக்குப் போகயில.
மட்டைலெரி வந்ததடா.
மத்திமமா வந்து அடித்ததடா.
இது இறைவன் வித்த்த விதியா?-அல்லது.
தண்டணை விதித்த விதியா?
பட்டணத்தில் படித்த என் தம்பி.
பள்ளிக்குட விடு முறையில்.
பாசமறிந்த சொந்தங்களை-பார்க்க.
பதினாறாம் தேதி வந்திருந்தன்.
அன்புத்தாய் சேவல்- வேண்டி.
பால்ச்சொறு கொடுக்க.
பக்கத்து வீட்டு கறுப்பன்ணா -வீட்டுக்கு.
போன தாய்.
திரும்பி வரவில்லையென்று.
காத்திருந்த எங்களுக்கு.
நிற் கதியாய் நசல் செய்தி- வந்திருந்தது.
செல்லடி வீச்சினால்-உயிர் விட்டு வட்டாய்-என்று.
இது .இறைவன் தண்டணையா?அல்லது.
விதியின் தண்டணையா?.
எம் தேசத்தில் பரந்த-அருவி வெளியினிலே.
பச்சை பசல் எனக் காட்சி தரும்.
வேளாமையும்.
வேளான்மையை தொட்டுத் தழுவி-வீசி
வரும் தென்றல் காற்றை.
சுவாசித்த எம் தேசத்தில்.
இப்போது.கந்த காற்னை.
சுவாசிக்கின்றோம்.
இதமான மாசற்ற கற்றினை.
சுவாசிக்கும் காலம் எப்பொது மலரும்.
இதுவும். இறைவன் தண்டணையா? அல்லது.
விதியின் தண்டணையா?
அம்மாவை. அப்பா-சைக்கலில்.
ஏற்றி ஒற்றையடிப்பாதையில்-ஓரமா.
புளியம்பெக்கனை சத்தியால் ஊடறுத்து.-செல்கையில்.
சீறிட்ட புக்காரா விமானம்-டப்பென்று
குண்டு போட்டதனால்.
ஒற்றையடிப் பாதையில்-இரட்டையர்கள்.
உடல் சிதறி-மான்டர்.
ஒற்றையடிப்பாதையில் -ஒருசனம்.
இல்லாத வேலையில்-யாருமற்ற.
தேசத்தில்-அனாதையா கிடந்தார்கள்.
இந்த சோதனையும் .வேதனையும்-யார் அறிவர்.
இதுவும். இறைவன் தண்டணையா? அல்லது.
விதியின் தண்டணையா?………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவுகலே!
இது இறைவன் தண்டணையா?அல்லது.விதியின் தண்டணையா? என்ற கவிதையை உங்களுக்க.
படைத்துள்ளேன்.உறவுகலே.வாசித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-