என்னைக் கைபிடிச்ச-என்.
அன்புக்கணவர்.
மண்னுலகில் சிலகாலம் வாழ்ந்து.
நிரந்தர வாழ்வான. வின்னுலகுக்கு.
வாழ புறப்பட்டுச் சென்று- விட்டார்.
எனக்காக கொள்ளி வைக்க.
ஒரு மகராசன் புறந்திட்டான்.
என்ற காரணத்தாலும்.
என் மகன் தனிப்பட்டு விடுவான்-என்றும்
என்னை கை பிடிச்ச மகராசனுடன்-நானும்
உடன் கட்டை ஏறவில்லை-ஏன்
என் மகனை உயிரிலும் மேலாக நினைத்து.
ஒரு பிள்ளை என்றுதானோ.
உதிரத்தை பாலாக்கி
இரவு பகல் கண் விழித்து.
விளக் கெண்ணையென்றும்
உனக்கு தலைக் கெண்ணையென்றும்
உன்னை வளாத்தேடுத்தேன் -மகனே.
உன் மளழை மொழிச் சொல்லைக் கோட்டாலு.
எனக்கு பசியே தீர்த்து விடும்…..
ஒரு பிள்ளை என்று தானே.
நான் அல்லும் பகலும்.
வீட்ட வேலை செய்து-உன்னை.
படிக்க வைத்தேன் மகனே
உன்னை எம் சமூதாயம். மெச்சும் படி.
உயர்ந்து நின்றாயே மகனே.
நம்ம ஊரில் உள்ள நாலு- பெரிய மனிதர்களை.
அழைத்து நீ இல் வாழ்கையில் வாழ.
நான் தினம தினம் இறைவனை.
உனக்காக வணங்கி நின்றேன் மகனே.
உனக்கு இல்லற வாழ்கையும் நடத்தி.
அந்த அழகையும் பார்த்து இரசித்தேனே- மகனே.
என் மகனின் மனைவியை -நான்
மருமகளாக நினைத்தேன்.
அவள் மாமியா நினைத்தாள்.-நான்
தினம் தினம் அன்பு காட்டினேன்.
மாமியாக ஆனால்-அவள்
தினம தினம் கொத்தும்
பாம்பாக இருந்தாள்.
என் இதயத்தில்- மகன்வருவான்
அம்மாவிடம் வந்து நலம் கேட்பான்.
என்று நினைத்தால்-ஆனால்.
என் மகன் பெற்ற தாயை மறந்து விட்டான்.-மகன்
பெத்த மனசு கல்லு.
பிள்ளை மனசு பித்து என்பார்கள்.
அந்த வேலையில் என் மனசு துடியாய் துடித்தது.
ஊமை வழி அழுகிறது.
நெஞ்சுக் குழி காய்கிறது.
ஒத்தடம ஒரு வார்த்தை.
யார் இங்கு சொல்வது
என்னை கை பிடிச்ச -என் கணவர்.
இருந்திருந்தாள் .
ஏன் எனக்கு இந்த நிலை.
விதவையாக முதிர்ந்து போனது-வயது.
எனக்கு காலம் கற்றுத் தந்த பாடம்.
மிகப் பெரிது…….மகனே.
என்ன குறை வைத்தேன் மகனே.-உனக்கு.
உன்னை ஈன்றெடுத்த தாயை.
அயலவனைப்போல- தள்ளிவைத்தாயே-மகனே.
உன் அன்புக்காக ஏங்கும் தாய்………….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-