புத்தாண்டே-நீ வருக!
புத்தாண்டே-நீ வருக!
புது கலமாய்-நீ மலர
புத்தமது உடையணிந்து
பூத்து வரும் புத்தாண்டே.
புது சுவாசத்தை வாத்தெடுத்து.
நீ.வருக!…நீ வருக!……
மாவிளக்கு-கோலமிட்டு
மாந்திரிகம் நாங்க சொல்லி.
கர வருடம் மலரும் -பத்தாண்டே!
கரகோசம் காட்டிவா!
விண்னுலகு கண்ணீர்- வடித்தால்.
மண்னுலகு-நனைந்தது.
மாரி மழை பொழிந்தது !
எங்கள் வயல் நிலங்கள்-அழிந்தது!
கடந்த விரோதி வருடத்தில்!
விசித்திரங்கள் நடந்தொரியது.
விடை தொரியாமல்-திக்கு தடுமாறினோம்!
மலருகின்ற கர வருடத்தில்.
அனைவரும் கரம்கோர்த்து- நின்றிடுவோம்.
சிங்களம் வேறு.தழிழ் வேறென்டு
விரோதி வருடத்தில்-விரோதம்
காட்டி நின்றோம்!
மலருகின்ற கர வருட புத்தாண்டில்.
சாதி மத பேதமின்றி!
ஒரு நாட்டுப்.பிள்ளைகளாய்
கர வருடத்தில் கரம் பற்றி நின்றிடுவோம்.
புத்தாண்டே நீ வருக…..
புது மலர்ச்சி தந்திடுவாய்!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-