ஈழத்து சொந்தங்கள் இன்று நாடோடி சொந்தங்கள்மனிதனை
இறைவன் படைத்தது
இவ்வுலகத்தில் வாழ்வதற்காக
ஆனால் மனித குலம்
இவ்வுலகில் சாவுகின்றது…
இன்றைய காலத்தில் நாளும் பொழும்
மிக விரைவாக விறு நடைபொடுகின்றது
காலங்கள் உருண்டோட-மனித
வாழ்வுச் சக்கரமும் உருண்டோடுது
ஒருநாட்டின் மக்களையும்
தன் பண்பாட்டையும்.கலாசாரத்தையும்
பாதுகாப்பது நாட்டின் மன்னனின்பொறுப்பல்லவா????
அன்நாட்டு மன்னன் நீதி நேர்மை தவறி.
நடந்தால் எப்படி வாழ்வது மக்கள்…
நீதி நேர்மை.நியாயம்.எல்லாம்
மன்னோடு மன்னாய் புரையோடியுள்ளது.
நீதி.நியாயம் இல்லாமல் வாழும் மக்கள்தான்
ஈழ மக்கள்.இதுதான் இன்றைய யதர்த்தம்
இதுதான் உண்மையின் கலங்கரை விளக்கம்
எம் தமிழ் இனத்தின் வாழ்வை பேனா மை
கொன்டு எழுத புறப்பட்டால் அள்ள.அள்ள
குரையாத நீரைப்போன்றது.
பக்கம் பக்கம்மாக எழுதலாம்
தன்நாட்டில் சுதந்திரம் இல்லை என்று
பிற நாட்டில் அடைக்கலம் கோரும் போது
எத்தனை எத்தனை துன்பங்களையும்
இருட்டரை வாழ்கையும் பட்டினி
வாழ்கையும்அனுபவிக்கவேண்டியுள்ளது.
உலகமே உனக்கு கன்ணில்லையா????
எம்மினத்தின் கொடுமையை சொல்லால்
விளக்கமுடியாது எப்போது தனியும்
சுதந்திரதாகம்…இதுதான்
ஈழத்துசொந்தங்களும் நடோடி வாழ்கையும்
-நன்றி-
-அன்புடன்-
ரூபன்