ஒரு தாய்யின் இழப்பால் ஒரு இளைஞ்ஞனின்
உள்ள குமுறல்
பத்து மாசம் மடியேற்றி.
பெற்றேடுத்த மகராசி-நீ.
உன் புன்னகை வதனத்தில்.
காலையில் நான் கண்விழிக்கும்.
போதெல்லாம் புன்னகையென்ற.
ஒளிவட்டம் தோன்றுமே -தாயே.
ஒரு பிள்ளை என்றுதானே.
ஊட்டி ஊட்டி வாளர்த்தாய்
என் முகத்தை பார்கத்தனே.-நீ.
சில காலம் வாழ்ந்தாயே- தாயே.
குழந்தைப் பருவத்தில்-நீ.
என்னை சிராட்டி தாலாட்டி.
வளர்த்தாயம்மா-உன்
கருணை முகம் கான.
என் மனசு துடிக்குது -தாயே.
பொறுமையின் கடலாக.
பொறுத்தக்கொண்டு.
நடமாடும் சிலைபோல-நீ
என் சுமையை தாங்கினாய்-தாயே.
அப்பாவுடன் ஒன்றாக -நீ
நடைபோடும் போது
உன் அழகைப் பார்த்து-இரசிக்க.
தெவலோகத்த கண்ணியரும் .
போதாது…………..தாயே.
என்னை நம் பக்கத்து வீட்டு.
முனியாண்டி மகனைப் -போல.
படிப்பித்து பட்டதாரியாக்க-வேண்டுமென்று.
பசு மரத்தாணிபோல அசையாத.
ஆசை வளாத்தாயே-தாயே.
உன் ஆசையை-நான்.
நிறைவடைய வைத்து விட்டேன்.
அதை பார்ப்பதற்கு-நீ இல்லை தாயே.
என்னை ஈன்றேடுத்த -தாயே.
நீ அமைதியாக -தூங்குறாய்.
கல்லறையில்-தாயே…..தாயே.
உன் மகனை பாப்பதற்கு-ஒரு கனம்
தலை தூக்கி பாருமே-தாயே.
உன் மகனுக்கு குதுகலமாய்
பட்டமளிப்பு- விழா
அதை பார்ப்பதற்க-நீ
இல்லை தாயே.
மனித குலம் மன்னில் வாழ்வது
சில நாள் வாழ்கை-தாயே
ஆனால் உன் நிரந்தர-வாழ்கை
நீ வாழும் உன் வின் உலகுக்கு.
விடை பெற்று சென்றாயே-தாயே..
உன் மரணத்தை தாங்க முடியாமல்.
என் மனசு துடிக்குது-தாயே…தாயே