இறைவன் மனிதனை படைத்தது
இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு
ஆனால் இன்றைய மனிதன்
தனக்குள் மற்ற மனிதனைப் பார்த்து
தனது மனக் கதவுக்குள் மாசு என்னும்
பகைத்தியை மூட்டுகின்றான்
ஏன் இந்த கசப்புணர் எதற்காக???
இன்றை நவின காலத்தில்
உலகம் மின்னல் வேகத்தில்
வீறு நடை போடுகின்றது
அந்த உலகத்தில்- மனிதனும்
வீறு நடை போடுகின்றான்.
இன்றைய மனித குலத்தின்
கொடுமையை தாங்க முடியாமல்.
இற்கையன்னை சீற்றம் கொண்டு
தனது அகோர முகத்துடன் பொங்கி
எழுகின்றால்.
இயற்கை அழிவு வரும்போது
நல்லவன் யார்?கெட்டவன் யார்?
என்று பார்ப்பதில்லை.
சமமாக எல்லோரையும் அழிக்கின்றது.
அப்போது நாங்கள் இந்தப்பூமியில்.
உயிர் விட்ட சடமாக கிடக்கும்போது.
இன்றைய மனிதன் நல்லவன் யார்?
கெட்டவன் யார் ?என்று பர்ப்பதில்லை
துன்பம் வரும் போது தோழ் கொடுப்போம்
பகைத் தீயை மறந்து கை கோர்க்கின்றான்.
ஏன் இந்த கசப்புணவு.
நமக்குள் மனிதா…மனிதா……
எங்கள் தமிழ்லினம்
இன்றைய உலகில்
மூலை முடுக்கேன்றும்-விரிந்து
பரந்து வாழ்கின்றான்.
பாம்புக்கும் கீரிக்கும் பகையென்று.
உலகறிந்த விடயம்.
எலிக்கு எதிரி பூனை என்பது போல…
இன்றைய மனிதன்-மற்ற மனிதனைப்
பார்த்து பகைத்தீயை மூட்டும் போது.
ஒருமனிதன் இன்னரு மனிதனுக்கு.
பகையாளியாக மாறுகின்றான்.
நாங்கள் கசப்புணவை அறுத்து விட்டு.
நட்பு என்ற இணைக்கரத்தை.
பின்பற்றுவோம்…….
இன்றைய மனிதன் கசப்புனவை.
வளர்த்து விட்டால்-எஞ்சுவது.
ஒன்றுமே இல்லை…
இன்று ஒருமனிதன் பேசும் பேச்சை.
மற்ற மனிதன்னிடம் சொல்லும் -போதுதான்
இந்த பகைத்தீசுடர் விட்டு எரிகின்றது…..
ஒருவன் ஒன்று சொன்னால்
அந்த செய்தியை திரிவு படுத்தி
நான்கு கருத்தாக சொல்லுவதால்தான்
மனிதனுக்குள் மனிதன் கசப்புணவை வளக்கின்றான்
அன்பு நெஞசங்கலே-நாங்கள்.
{ஆறு }அறிவ படைக்கப்பட்ட
மனித குலம்-ஆண்டவனால்
எங்களுக்கு சுயமாக சிந்தித்து
செயற்படும் ஆற்றலை தந்துள்ளான்.
மனிதனாகிய நாம் மற்ற மனிதனுக்கு.
கசப்பான பகை உணவை வளர்க்காமல்.
அன்பு என்னும் ஆலமர-விருட்சத்தை.
வளர்ப்போம்…..
{ஒற்றுமையே எங்கள் பலம்}
-அன்புடன்-
-ரூபன்-