துடுப்பு இல்லாத ஓடம்
மனித குலம் இன்று திசைமாறிய பறவைகளாக
அலையலையா அலைந்து திரிகின்றார்கள்
இந்த சோகங்களுக்க நடுவில்
இன்றைய 21ம் றூற்றாண்டில்
எத்தனையோ மனிதன்-தன் வாழ்கையை
துடுப்பு இல்லாத ஓடம் போல் வாழ்கின்றான்
நாம் இரத்த உறவுமளையும் இழந்து
நம் வாழ்விடங்களையும் இழந்து
இன்று அனாதையாக புள்ளி இல்லாமல்
போடப்பட்ட கோலங்களாக.
தன் வாழ்கையை துடுப்பு இல்லாத
ஓடம் போல வாழ்கின்றான்.
நாளும் பொழுதம் இன்றைய
உலகில் வீறு நடை போடுகின்றது.
மனிதனும் தன் வாழ் நாளில் பல
சவால்களை சந்திக்கின்றான்
அத்தனை சவால்களையும் மனிதன் சுமக்கின்றான்
ஆனால் அத்தனை சாவல்களையும் சுமக்காமல்
எத்தனையோ மனிதன் தன் வாழ் நாளில்
துடுப்ப இல்லாத ஓடம் போல வாழ்கின்றான்..
சீராட்டம் தாலாட்டம் கடல் அலையின் நடுவே
துடுப்பு இல்லாத ஓடம் எப்படி தண்ணீரில்
தள்ளாடுதே அதைய போன்றுதான் இன்றைய
உலகில் இளைஞ்ஞர் யுவதிகள்
துடுப்புயில்லாத ஓடம் போல தள்ளாடுகின்றார்கள்…….
சத்தியத்தின் இலட்சியத்துக்காக
சாகத் துணிஞ்சவன்-தன்
வாழ் நாட்களில் செம்மையாகச் செய்வான்
ஆனால் இன்றைய மனித குலம்-தன்
வாழ் நாட்களில் வெட்டிப்பேச்சிலும்
பெரு மூச்சிழும்ம்தான் வாழ்கின்றான்.
இன்றைய இளைஞ்ஞர்கள் நாளைய தலைவர்கள்
என்பத போல நாம் வாழ்கின்ற காலங்களில்
இன்றைய இளைஞ்ஞர் யுவதிகளை-நல்வளிப்படுத்தி
வாழ்வில் எதீர் நீச்சல் போட வைப்போம்
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கும்
உரமூட்டுவோம் இன்றைய இளைஞ்ஞர்களை
துடுப்புயில்லாத ஓடம் போல தத்தளிக்க விடாமல்
கடல்அலையின் நடுவே எதீர் நீச்சல் போடும்
ஓடம் போல எதீர் நீச்சல்போடவைப்போம்…
-நன்றி-
-அன்படன்-
-ரூபன்-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...