அன்பே நீ வேண்டும்
காலத்தின்தேவதையாய்
கலங்கரை விளக்காய்-உன்னை
புரிந்து கொண்டேன்-நான்
காலத்தின் வெளிச்சமாய்
மெனலிசா ஓவியமய்-நீ
புதிய அடையாளச் சின்னமாய்
என்னுள்ளே நீ மிளிர்ந்து விட்டாய்
ஆகாய நட்சத்திர கூட்டங்களின்
ஒளியை இரசிப்பவன் -நான்
உன் நடையிலும் உன் சிரிப்பிலும்
நான் சேதமானேன்-அந்த
சேதாரத்துக்கு செய் கூலி தருவவள் யார்???
பொழுதை விரையம் செய்யாமல்
நீ -வெளியே வா.வெளியே வா……..
என் ஐம் புலன்களின் பதற்றம்
உன் ஆசை மடியில் இளைப்பாற…
பழைய நாட்களைப் போல இல்லாமல்
புது நாளாக மகிழ்வு கொள்-அன்பே
இனிவரும் நாட்கள் எல்லாம்
உனக்காகத்தான்
என் வாழ் நாட்கள் எல்லாம்-உனக்காகத்தான்
அன்பே……அன்பே….ஆருயிரே……….
-அன்புடன்-
-ரூபன்-
Rompa Thanks.Thampi