எப்போதுதான் பார்ப்பது
சித்திரையில்-பார்ப்போம்
சிங்காரியே சொல்லு
நித்திரையும் போனதடி
நின்று பதில் சொல்லும்
சித்திரை மாத சுடும்வெயிலில்
சுர் என்று என்னைத் தாக்குமே
பத்து மாத தங்க மேனி
கறுத்துப்போகுமே
வயாடி முத்தழகி
வாழத்தண்டு காலழகி
வைகாசி மாத்திலே
வருவாயாசொல்லேன்டி
வைகாசியில் வனம் கறுக்கும்
வழியெல்லாம் ஈரம் சொட்டும்
வழுக்கிவிட்ட என்னவாகும்?
நான்னிருக்கேன் உனக்கு
சொல்லும்மடி புள்ள
ஆனிமாசம் வந்திடுவாய்
ஆடி ஓடி முத்தம் தந்திடுவேன்
என் அன்பிற்கு ஆனிமாத முத்தம் போதுமடி
அப்புறம் எதற்கு சந்திப்பு
சொல்லுமடி சொல்லுமடி…
போடி நீ போக்கிரி
பொல்லாத கைக்காரி
ஆடிமாசம் எப்படி
நாள் பாத்து சொல்லடி
ஆடிமாதம் ஆகாதன்னு
அப்பனும் ஆத்தாலும் சொன்னாங்க
பாடி பாடி சொன்னாலும் உன் மண்டையில ஏறாதடி
சாமியாரை பாhப்பொம்-நல்ல சகுனம்
ஒன்று கேட்போமா?
என்னை சேதாரம் பண்ணிப்போட்டு
செய்கூலியும் கேட்பார்கள்
அஞ்சி மாதம் பொறுத்திரு
ஐப்பேசி வந்து விடும்-அப்போ
மிஞ்சி அணிய விரல்தாரேன்-இந்தப்
பஞ்சோடு நீ தீயாக
-அன்புடன்-
-ரூபன்-