கல்வி பயிலும் காலத்தில்
நான் வாழும் இடம் வேறு
நான் கல்வி பயிலும் இடம்வேறு
கொட்டும் மழைதனிலும்
கொட்டும் வெயில் தனிலும்
பத்து வயதினிலே என் கால்கலே
எனக்கு வண்டியாக உதவியது
துவிச்சக்கர வண்டியில்-பள்ளிக்கு
வரும் நண்பர்களை விட நான்
அரை மணிநேரம் முன்கூட்டியே
சென்றிடுவேன்
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்
நான் வழும் இடத்தில் மின்சார-வசதியில்
குப்பி வளக்கிற்கு-மண்ணென்னை
பாவித்து படித்தததான்
நான் படிப்பதற்காக என்வீட்டில்
எனக்கென்று ஒரு அரையை ஒதுக்கினேன்
நான் எப்போதும் தனியாக அமாந்து படிப்பதுதான்
8ம் வகுப்பு தொடக்கம்13ம் வகுப்பு படிக்கும்-வரை
ஒரே இடத்திலிரந்து படித்தேன்
எனக்கு ஒளியூட்டிய அந்த குப்பி வளக்கின்
கண்ணீராண அந்த கறுப்பு புகை படிந்திருக்கம்-இடம்
என் படிப்பின் ஒரு அடையாள சின்னமாய்
சின்மத்திரையாக படிந்துள்ளது.
நினைவுகள் வரும்போது அந்த இடங்களை பார்ப்பதுதான்
என்அம்மா விட்டிற்கு வெள்ளை பூசும் போது
அந்த இடத்திற்கு மட்டம் பூசவேண்டாம் அம்மா
அது உன்மகன் படித்தகாலத்தில்
ஒளியை கொடுத்த குப்பி விளக்கின்
கண்ணீரம்மா என்று பதில டிசான்னேன்
நினைவுகள் வரும்போது அந்த கண்ணீரை
திரும்பி பார்ப்பது எனது வழக்கம்
அன்புடன்
ரூபன்