அன்னை
குருதி பாலுடன் மொழிப்பில் கலந்து
கொடுக்கும் தாயின் இதயம்-தாயின்
உருவம் உலவும் விட்டி லனடறோ
ஒவ்வொரு நாளும் எழுச்சி
உந்தலில் உதிக்கும் உதயம்
தாயை இழந்தவன் முகத்தில் சோகத்
தழும்பு நிட்சயம் படியும் பல
ஆயிரம் உறவுகள் இருந்தபோதும்
அன்னை அன்பு பட்டால்
அத்தனை துயரும் மடியும்
அடித்தான் பட்டால் எல்லா உயிரும்
அம்மா வென்று கதறும்-அம்மா
மடியில் தலையை சாய்த்தால் மறுகணம்
வசந்தகாலம் நெஞ்சில்
வளரும் அன்னைபோல் தொடரும்!
ஈன்ற தாயை முன் நிறுத்தி
எடுக்கும்பணிகள் வெல்லும்-கண்முன்
தோன்றும் தெய்வத்தாயின் காலடி
தொழுது நிமிர்ந்தால் கைகள்
சுடர்வான் உடுக்களை அள்ளும்
உச்சி மோர்ந்து கொஞ்சிக் குலவி
உயிராய் வளத்த அன்னை-உள்ளம்
துக்கப்பட்டகண்ணீர் படைபோல
துரத்தி துரத்தி அடித்து
துன்பப்டுத்தும் உன்னை…..!